செய்திகள் :

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

post image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், தங்களை பின்தொடர்ந்து துரத்திய கார்களை செல்போனில் வீடியோவாக எடுத்தனர். பின்னர் அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து சி.சி.டி.வி, வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரித்தனர்.

விசாரணையில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர்தான் தி.மு.க கொடி கட்டிய காரில் தன்னுடைய நண்பர்களுடன் பெண்கள் பயணித்த காரை துரத்தியது தெரியவந்தது. இதையடுத்து சந்துரு, அவரின் நண்பர் சந்தோஷ் உள்பட கல்லூரி மாணவர்கள் என 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பள்ளிக்காரணை துணை கமிஷனர் கார்த்திக்கேயன், இந்த வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு உடனடியாக சி.எஸ்.ஆர், புலன்விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்திருக்கிறது.

காரில் பயணித்த பெண்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தவுடன் சம்பவ இடத்துக்கு ரோந்து போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர் என்று விரிவாக விளக்கமளித்தார்.

சந்துரு

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``கைதான சந்துரு மீது ஆள்கடத்தல், மோசடி என குற்ற வழக்கு நிலுவையில் உள்ளன. இவர் நிரந்தரமாக எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருகிறார். இந்தக் குற்றச் சம்பவத்துக்கு சந்துரு பயன்படுத்திய கார், அவரின் பெயரில்லை. இவர், இன்னொருவரிடமிருந்த இந்தக் காரை வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார். மேலும் சந்துருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கும் பழக்கம் உள்ளது. அவர்கள் அனைவரும் இரண்டு கார்களில் சம்பவத்தன்று ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அதே இடத்துக்கு பெண்களும் காரில் வந்திருக்கிறார்கள்.

நள்ளிரவு நேரம் என்பதால் பெண்களுக்கும் சந்துருவுடன் வந்த கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் பயணித்த காரை சந்துருவுடன் வந்தவர்கள் இரண்டு கார்களில் பின்தொடர்ந்து விரட்டி வந்திருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தபிறகும் அங்கேயேயும் சந்துருவுடன் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்பிறகே பெண்கள், எங்களிடம் புகாரளித்தனர். இந்த வழக்கில் சந்துரு பயன்படுத்திய காரில் தி.மு.க கொடி இருந்தது. ஆனால் சந்துருக்கும் தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. டோல்கேட்டில் கட்டணம் கொடுக்காமல் தப்பிக்க சந்துரு, காரில் தி.மு.க கொடி கட்டியிருந்திருக்கிறார்.

சந்தோஷ்

சந்துருவின் நண்பன் சந்தோஷ். இவர், கல்லூரி ஒன்றில் படித்து முடித்துவிட்டு வேலைத் தேடி வருகிறார். இவர் மூலமாக கல்லூரியில் படிக்கும் சிலர் சந்துருவுக்கு நண்பர்களாகியிருக்கிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் குடும்பத்தினர் அ.தி.மு.கவில் இருக்கிறார்கள். சந்துருவின் உறவினர் ஒருவர் தாம்பரம் அ.தி.மு.கவில் இருக்கிறார். இன்னொருவின் சித்தப்பா நீலகிரி மாவட்ட அ.தி.மு.கவில் உள்ளார். இந்த வழக்கில் தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் காரை துரத்தியதால் எதிர்கட்சிகள் பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்தன. அதனால் இந்த வழக்கை மிகவும் கவனமாகவும் துரிதமாகவும் விசாரித்தோம். புலனாய்வு குறித்த தகவல்களையும் துணை கமிஷனரே நேரில் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்தார். வழக்கில் தொடர்புடைய கார்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றனர்.

தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வெங்கடேஷுக்கு ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு இரண்டாவது முறை... மேலும் பார்க்க

கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...

கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இர... மேலும் பார்க்க

“ECR விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அதிமுகவைச் சேர்ந்தவர்" - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?

சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கா... மேலும் பார்க்க

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!

வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வர... மேலும் பார்க்க