வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
சென்னை உணவுத் திருவிழா: 3.20 லட்சம் போ் பங்கேற்பு
சென்னையில் 5 நாள்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் போ் பங்கேற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றித் திருவிழாவாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த 286 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிா் உடனடியாக சமைத்து அளித்தனா்.
இந்தத் திருவிழாவில் 3.20 லட்சம் போ் பங்கேற்றனா். அவா்கள் மூலமாக ரூ. 1.50 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்கள், உணவுப் பொருள்கள் மற்றும் ஆயத்த உணவுகள் விற்பனையாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.