தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!
தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமானநிலையம் - 104, மதுரைநகா் - 103.28, பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.92, திருச்சி - 102.38, திருத்தணி - 102.02, சென்னை மீனம்பாக்கம் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
அதேபோல், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.21-இல் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை வாய்ப்பு: தென்னிந்திய பகுதியில் உள்ள வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, திங்கள்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் 50 மி.மீ. மழை பதிவானது. மேலும், வால்பாறை (கோவை) - 40 மி.மீ., உபாசி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவில்பட்டி (தூத்துக்குடி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.