சென்னை பந்துவீச்சை சிதறடித்த பிரியான்ஷ் ஆர்யா 39 பந்தில் அதிரடி சதம்..! 220 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ரன்கள் குவித்துள்ளது. இதனால், சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சண்டீகரில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாகத் தெரிவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா - விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் ஓவரிலேயே சிக்ஸருடன் ஆட்டத்தைத் தொடங்கி வெளுத்து வாங்கிய ஆர்யா 17 ரன்கள் விளாசினார். பிரப்சிம்ரன் சிங் 2 ஓவரில் ரன்கள் ஏதுமின்றி ஏமாற்றமளித்தார்.
அவருக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸருடன் 9 ரன்களிலும், ஸ்டோனிஸ் 4 ரன்களிலும், நேகல் வதேரா 9 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.