இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வெடிகுண்டு வடிவில் மா்மப் பொருள்: போலீஸாா் ...
சென்னை, புறநகரில் கனமழை!
சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை அய்யப்பன் தாங்கல், குரோம்பேட்டை, விமான நிலையம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையையொட்டியுள்ள பூவிருந்தவல்லி, குமணன் சாவடி, வேலப்பன் சாவடி, கோவூர், காட்டுப்பக்கம், திருவேற்காடு, ஆவடி, மாங்காடு, குன்றத்தூர், தாம்பரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ.5 ஆம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.