செய்திகள் :

சென்னை வந்தடைந்தார் அமித் ஷா!

post image

பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண வரவேற்பு விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி விமானம் தில்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார்.

அமித் ஷாவுக்கு விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து கிண்டி, ஓ.எம்.ஆர். சாலை வழியாக திருமண விழாவுக்கு அமித் ஷா செல்கிறார்.

இதையும் படிக்க:தில்லி தேர்தல்: ஆம் ஆத்மியின் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் விலகல்!

இந்த திருமண விழாவுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை தருவதால், சென்னையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை வழக்கமான போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு விழாவுக்கு அமித் ஷா வருகை தந்தாலும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்று முன்னரே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசியதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் ... மேலும் பார்க்க

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது: புஸ்ஸி ஆனந்த்

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என கட்சியின் பொதுச்செயல் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும்... மேலும் பார்க்க

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துவைத்துள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 42 மீனவர்களையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மீனவர்கள் இன்று (மார்ச் 2) கோரிக்கை மனு அளித்தன... மேலும் பார்க்க

நான் பாலியல் குற்றவாளியா? கனிமொழிக்கு சீமான் பதில்!

தன்னை பாலியல் குற்றவாளி எனக் கூற மற்றவர்களுக்கு என்னத் தகுதி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை அவதூறாகப் பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்த... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை: தமாகா அறிவிப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வ... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு!

சிதம்பரம் அருகே கிராம குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் இன்று (மார்ச் 2) மீட்டனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கிரமாரி கிராமத்தின் மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க