நான் பாலியல் குற்றவாளியா? கனிமொழிக்கு சீமான் பதில்!
தன்னை பாலியல் குற்றவாளி எனக் கூற மற்றவர்களுக்கு என்னத் தகுதி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களை அவதூறாகப் பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக் கொண்டு சீமான் உடன் எப்படி கட்சியில் இருக்கிறார்கள்? என எனக்கு தெரியவில்லை என கனிமொழி கருத்துக் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமான சீமான் இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் சீமான் பேசியதாவது,
என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள்; நீங்கள் நீதிபதியா?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பலகலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.
என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர். என்னைப் பார்த்து நடுங்குவதால் எனக்கு எதிராக சதி செய்கின்றனர்.
நாடெங்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தபோது கனிமொழி வாய் திறந்தாரா? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்கள் கொள்கையா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க |சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?