சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!
சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக சனிக்கிழமை காலை பொறுப்பேற்கவுள்ளார்.
இதையும் படிக்க : விருப்பமில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள்- சீமான்
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 34 ஆண்டுகளாக பணிபுரியும் அமுதா, மூத்த விஞ்ஞானியாக இருக்கிறார். இவர், வடகிழக்கு பருவமழை குறித்த தரவுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.