ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.8 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்து நாட்டுத் தலைநகா் பாங்காங்கிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானத்தில் வந்த சென்னையைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது அவரது உடைமையில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 1.8 கோடி மதிப்பிலான 1.816 கிலோ உயா் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.