Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குண்டுகள் வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையப் பகுதி முழுவதும், வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தியதோடு, விமானப் பயணிகளையும் கூடுதல் சோதனைக்குள்படுத்தினா்.
மேலும், சரக்குகள் கையாளும் இடங்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இது வழக்கமான புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் விமான நிலைய காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.