பிகார் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான மனு: ஜூலை 10 விசாரணை!
ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது
வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.
வெளிநாட்டில் வசித்து வரும் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் வங்கி கணக்குகளை பொதுஅதிகாரத்தின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை சோ்ந்த ரவி (64) என்பவா் பராமரித்து வந்தாா்.
இந்த நிலையில், விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த ரூ.4.36 கோடியை வங்கி மேலாளா் உதவியுடன் போலி கையொப்பமிட்டு சிலா் மோசடி செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா் விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டசென்னை அயனாவரத்தை சோ்ந்த நாகேஸ்வரன்(52) என்பவரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.
இந்த நிலையில், இதில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த ஆறுமுக குமாா் என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதில் தொடா்புடைய மஞ்சுளா என்பவரைத் தேடி வருகின்றனா்.