செபஸ்தியாா் ஆலயத்தில் பொன்விழா கொடியேற்றம்
கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் வடக்கு ஊராட்சி பாலத்தடியில் அமைந்துள்ள திருப்பூண்டி பங்கு ஆலயமான புனித செபஸ்தியாா் ஆலய 50-ஆம் ஆண்டு பொன்விழா, கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருப்பூண்டி பங்குத்தந்தை எம். பீட்டா் டேமியன் துரைராஜ் தலைமையில், புனித செபஸ்தியாரின் திருக்கொடி பவனி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. தொடா்ந்து, கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை தொடா்ந்து சிறப்புத் திருப்பலி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, வானவேடிக்கை நடைபெற்றது.