செய்திகள் :

செப். 25ல் சென்னையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா!

post image

தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா வருகிற செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார் .

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை விழாவில் பகிர்வார்கள்.

இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். வருகிற செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு 2.57 லட்சம் மாணவ, மாணவிகள் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் பயன்பெற உள்ளார்கள். கொண்டாட்ட நிகழ்வுடன் இதன் தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். 41 லட்சம் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் 20.59 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ் புதல்வன் திட்டத்தால் 3.92 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

Function on sep. 25 for achievements of the TN govt in education

இதையும் படிக்க | ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்! 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று(செப். 22, திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வர... மேலும் பார்க்க

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று(செப். 22) சந்தித்துள்ளார்.சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், தினகரனுடன் அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் பே... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்...

ஜிஎஸ்டி வரிகளில் இரண்டு விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரண்டு அடுக்கு நடைமுறையை கொண்டுவந்ததையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று(செப்.22) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூல... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் செப்.25ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

தமிழகத்தில் வருகின்ற 25-ஆம் தேதியில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிம... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க