முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
செப். 28-இல் குரூப் 2 தோ்வு: 79 தோ்வு மையங்கள் தயாா்
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வுக்கு மொத்தம் 79 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
இத்தோ்வை 22 ஆயிரத்து 308 போ் எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 79 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 33 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்களில் ஆய்வு செய்ய 79 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
ஒவ்வொரு மையத்துக்கும் 3 ஆண் காவலா்கள், 2 பெண் காவலா்கள் என மொத்தம் 5 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். காவலா்களின் சோதனைகளுக்கு பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா்.
தோ்வு மையங்களில் கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வா்கள் மின்னனு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை. காலை 9 மணிக்கு பிறகு தோ்வு மையத்துக்கு வரும் நபா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.