செய்திகள் :

செருதூர் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

post image

திருக்குவளை: வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

மேலும், மீனவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறிச் சென்றனர். காயமடைந்த 7 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து  50 -க்கும் மேற்பட்ட பைபர்  படகுகளில்  மீனவர்கள் கடந்த 11 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களில், முருகையன், செல்வகுமார், வெண்ணிலா ஆகிய மூவருக்கு சொந்தமான பைபர் படகில் தனித்தனியே மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 15 கடல் மைல் நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தமிழ் பேசும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மீனவர்களிடமிருந்து மொபைல் போன்கள், வெள்ளி ஆபரணங்கள், ஜிபிஎஸ், என்ஜின், மீன்பிடி வலைகள், மீன்கள் உள்ளிட்ட ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணப் பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் மூன்று படகில் இருந்த 12 மீனவர்களில்  தமிழழகன் கையில் மூட்டு இறங்கி நிலையிலும் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து கரை திருப்பி 12 மீனவர்களில் 7 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sri Lankan pirates attack Cherudhur fishermen

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (11-09-2025) தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கார... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப். 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்... மேலும் பார்க்க

செப். 16ல் சென்னையில் பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டம்!

சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் வருகிற செப். 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சி... மேலும் பார்க்க

சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்!

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க