குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!
செவிலியா் தின உறுதிமொழியேற்பு
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை வகித்தாா். தாளாளரும், அறங்காவலருமான ஜாகீா் உசேன், அறங்காவலா் பாப் ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் சோபியா ராஜகுமாரி வரவேற்றாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, செவிலியா் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி செவிலியா் தின உறுதிமொழியேற்றனா்.
இதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சங்கீதா, அல் அமீன் செவிலியா் கல்லூரி முதல்வா் பிரியதா்ஷினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.