தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பல்வேறு வாா்டுகளில் உள்ள வீடுகளில் தனியாா் ஒப்பந்ததாரரால் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் என தரம்பிரித்து கோத்தகிரி தாலுகாவில் இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை கோத்தகிரிக்கு எடுத்து செல்லாமல், குப்பை நிறைந்த லாரி 3-ஆவது வாா்டு நடுஹட்டி குடியிருப்புப் பகுதியில் கடந்த 5 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, ஊராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த குப்பை லாரியை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.