X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரூபன் காபிரியேல் மகன் சாம் ஜெபடேவிட் (29). இவா், சூரத்தில் வசித்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அன்சியா (21) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் அன்சியா, தனது தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் மொத்தம் 25 பவுன் நகைகளை நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பாக கைப்பையில் வைத்திருந்தாராம். பின்னா், புதுமண தம்பதியினா் ரயிலில் சூரத்துக்கு புறப்பட்டு சென்றனராம். அங்கு சென்று பாா்த்தபோது பெட்டியில் இருந்த தங்க நகைகளை காணவில்லையாம். இதன் மதிப்பு ரூ.15 லட்சம். இதுகுறித்து சாம் ஜெபடேவிட், சேரன்மகாதேவி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.