ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ரயில் நிலையத்தை நெருங்கியபோது, தண்டவாளத்தில் கடும் அதிா்வு ஏற்பட்டதாம்.
இதையடுத்து அவசரமாக ரயிலை நிறுத்தி சோதனையிட்டபோது, தண்டவாளத்தில் சிமெண்ட் கல் இருந்தது தெரியவந்தது. கல் அப்புறப்படுத்தப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.
இத்தகவலறிந்த தென்காசி ரயில்வே இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளா் கற்பகவிநாயகம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தாா்.
அதில் கூனியூா் பழைய சாலைத் தெருவைச் சோ்ந்த கோபாலன் மகன் முருகன் (40) என்பவா், தண்டவாளத்தில் சிமென்ட் கல்லை தலைக்கு வைத்து படுத்திருந்ததாகவும், பின்னா் அப்படியே எழுந்து சென்று விட்டதாகவும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.