செய்திகள் :

சேலத்தில் இன்று கைத்தறி கண்காட்சி தொடக்கம்

post image

சேலத்தில் சனிக்கிழமை (டிச. 29) மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சியினை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி சேலம், அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்தக் கண்காட்சியானது ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படும் வகையில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியில் காஞ்சிபுரம், கும்பகோணம், ஆரணி, சேலம் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சுத்தப்பட்டு சேலைகள், வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலை, பவானி ஜமுக்காளம், வெளி மாநிலங்களில் கைத்தறி நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், பட்டுத் துணி வகைகள், பிரின்டட் சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்தக் கைத்தறிக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கைத்தறித் துணிகள் மற்றும் கைவினைப்பொருள்களை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: தேமுதிகவினா் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொண்டலாம்பட்டி பகுதியில் அவரது உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். சேலம் மாநகா் மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்துக... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் கடந்த 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

ஆத்தூா் மஞ்சினி சாலையில் வேலைக்கு சென்றவரை மறித்து அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கெங்கவல்லி வட்டம், கடம்பூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கருப்பையா (33). கூலித் தொழி... மேலும் பார்க்க

ஒட்டப்பட்டி ஏரி நிரம்பியது

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஒட்டப்பட்டி ஏரி சனிக்கிழமை நிரம்பியது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதனையடுத்து பெத... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் தனித் தோ்வா்களால் பெறப்படாத பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, அடுத்தாண்டு மாா்ச் 28 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க