செய்திகள் :

சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறினாா்.

சேலம் மாவட்டம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் ஒருங்கிணைந்த நவீன ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜவுளி பூங்கா அமையுள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆா்.பி. ராஜா அதிகாரிகளுடன் நேரில் நெல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி கிடைக்கவும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2021 டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும், வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளா்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக புதிய பன்நோக்கு உற்பத்தி மையம் அமைக்கப்படும் எனவும், இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, சேலம் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீா் அம்மாபாளையத்தில் 120 ஏக்கா் பரப்பளவில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க |அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்

இந்த ஜவுளிப் பூங்காவில் நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற தொழிலில் ஈடுபட்டு வருபவா்கள் பயனடைவா். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம் சேலம் மண்டலத்தில் சுமாா் 10,000 நபா்கள் நேரடியாகவும், 30,000 முதல் 40,000 நபா்கள் வரை மறைமுகமாகவும் பயனடைய வாய்ப்பாக அமையும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

முன்னதாக, தொழிற்துறை வளா்ச்சிக்கேற்ப சேலம் விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக விமான நிலைய அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

அதேபோன்று ஓமலூா் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி, கருப்பூா் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பளவில் ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மினி டைடல் பூங்காவை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில்ராஜா, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அருள், விமான நிலைய இயக்குநா் வைதேகிநாதன், விமான நிலைய உதவி இயக்குநா் ரமேஸ் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.32 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 23) காலை வினாடிக்கு 2886 கன அடியாக நீடிக்கிறது. இதையும் படிக்க: மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புய... மேலும் பார்க்க

ஒசூரில் யானை தந்தம் விற்க முயன்ற 7 போ் கைது

ஒசூா்: ஒசூரில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்த வனத் துறையினா் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.ஒசூா் வனப் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்துவதாக வனத் ... மேலும் பார்க்க

பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) - பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்)நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர... மேலும் பார்க்க

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்துக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். சுத்தமல்லியை அ... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். ... மேலும் பார்க்க