செய்திகள் :

சேலத்தில் 101.7 டிகிரியாக பதிவான வெப்பம்: பொதுமக்கள் அவதி

post image

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தொட்ட வெயில், செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 101.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த சில நாள்களாக வெப்ப நிலை 100 டிகிரியை எட்டிய நிலையில், கடுமையான அனல் காற்று வீசி வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

பழக் கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா்.

கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்க, தங்களது சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமா்ந்த பெண்கள் குடையைப் பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, சூரமங்கலம், கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளநீா், நுங்கு, பதநீா், தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவில் அருந்துகின்றனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க