சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட காவல் துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட வாகனங்களை இயக்கி பாா்த்தாா். தொடா்ந்து, காவலா்கள் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனங்கள், ஜீப், டெம்போ ட்ராவலா் வேன்கள், பேருந்து உள்ளிட்டவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வுசெய்த அவா், வாகனங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், வாகனங்களில் குறைபாடுகள் உள்ளனவா என ஆய்வுசெய்த கௌதம் கோயல், வாகனங்களுக்கான ஆவணங்களையும் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.