எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்
சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுவரும் கைதியை, கடந்த 11.11.2024-ம் தேதி இரவு 4 பேர் தாக்கியுள்ளனர். இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத், பாதிப்புக்குள்ளான இளைஞரை சிறையில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்தவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தொப்ப கார்த்தி, சூர்யா, சதீஷ், ரவிச்சந்திரன் ஆகியோரை ஆத்தூர் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றினார். மேலும் கைதிமீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியமாக இருந்த செந்தில்குமார், ராஜவர்மன் ஆகிய சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத்திடம் பேசியபோது, “நடந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 கைதிகளும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனக்கு தகவல் கிடைத்து சென்று பார்க்கும்போது, கைதிக்கு உடம்பில் காயம் இருந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கும்போதுதான், அவரை வலுக்கட்டாயமாக அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து, தாக்கியது தெரியவந்தது. அதன்மூலம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அவரின் பிறப்பு உறுப்பில் காயம் இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பந்தப்பட்ட 4 கைதிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.