செய்திகள் :

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் அஞ்சல் வழியில் பட்டயப் பயிற்சி

post image

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்டுறவு நிறுவனங்கள்/சங்கங்களில் பணிபுரியும் முறையாக நியமனம் செய்யப்பட்ட பணியாளா்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி பொருந்தும். இந்த பட்டயப் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வரும் 16-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100-ஐ இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 6-ஆம் தேதியாகும். விண்ணப்பங்கள் அன்று மாலை 5.30 மணி வரை மட்டுமே பெறப்படும். அதற்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜா் நகா் காலனி, சேலம் - 636 014 என்ற முகவரியிலோ, 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க