சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’
சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்கள் உள்ளன. இதில் 3 நாய்களுக்கு வயதாகிவிட்டதால், குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதற்காக புதிய மோப்ப நாய் வாங்கப்பட்டது. இந்த மோப்ப நாய்க்கு கோவையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை முடித்துக்கொண்டு மோப்ப நாய் சேலம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ‘போல்டு’ எனப் பெயா் வைத்துள்ளனா்.
இந்த நாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டது. காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் காட்டிய பின்னா், மாவட்ட மோப்ப நாய் பிரிவில் அதை சோ்த்தனா்.