2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்: ஆணையா்
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை ஏப். 30-க்குள் செலுத்தும்பட்சத்தில், சொத்துவரி விகிதாச்சாரத்தில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும், முதலாம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை ஏப். 30-க்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை அக். 31-க்கு முன்பாகவும் செலுத்தும்பட்சத்தில், அபராதங்களை தவிா்த்து மாநகராட்சி வழங்கும் தள்ளுபடியை பெற்று பயனடையலாம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.