மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்.....
ஜன நாயகன் முதல் பாடல் எப்போது?
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில், படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் விஜய் பாடிய முதல் பாடலை தீபாவளியன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையமைப்பில் ஜன நாயகன் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முன்பதிவிலேயே ரூ. 100 கோடி... அசத்தும் ஓஜி!