ஜன. 21-இல் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
கமுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 21) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செவ்வாய்க்கிழமை கமுதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கமுதி வட்டச் செயலா் முருகேசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம், வட்டத் தலைவா் சந்திரன், பொருளாளா் ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில்சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். இதில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வா் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கமுதி வட்டக் குழு சாா்பில் அறிவிக்கப்பட்டது.