ஜன.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.3) முதல் ஜன.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.3 முதல் ஜன.8 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னைக்கு மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.3,4 தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே டிச.3,4 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.