செய்திகள் :

ஜம்மு: கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் படுகாயம்!

post image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தின் ரஜௌரி மாவட்டத்தில் இன்று (ஜன.14) வழக்கமான ரோந்து பணிகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 10.45 மணியளவில் நவ்ஷெரா பகுதியிலுள்ள கம்பா கோட்டை அருகில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது படைவீரர் ஒருவர் அறியாமல் மெதித்துள்ளார்.

இதில், தூண்டப்பட்டு அந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2015-ல் காவலரைத் தாக்கிய நபருக்கு 1 ஆண்டு சிறை!

இதனைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்று வரும் அவர்கள் 6 பேரது உடல் நிலையும் தற்போது சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, எல்லைக்கோட்டில் சட்டவிரோதமாக யாரேனும் உள்ளே வராமல் தடுப்பதற்காக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் அவை அங்கிருந்து மழை நீரில் அடித்து வரப்படுவதினால் இதுமாதிரியான விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.76-வது இந்திய ராணுவ நாளையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்: கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு!

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வர் ... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதி நீக்கம்!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியானது 10 சுற்... மேலும் பார்க்க

மாட்டுப் பொங்கல்: பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

மாட்டுப் பொங்கலையொட்டி பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார்.பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்... மேலும் பார்க்க

ஒடிசா: யானை தாக்கியதில் தந்தை, மகள் படுகாயம்!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.கஞ்சம் மாவட்டத்தின் முஜகடா வனப்பகுதியில் இருந்து சரப்படா கிராமத்தினுள் இன்று (ஜன.14) அதிகாலை காட்டு யான... மேலும் பார்க்க