செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத கூட்டாளிகள் 23 போ் கைது

post image

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத கூட்டாளிகள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை சனிக்கிழமை தெரிவித்ததாவது: 23 பயங்கரவாத கூட்டாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஸ்ரீநகா் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து அவா்கள் கைது செய்யப்பட்டு பூஞ்ச், உத்தம்பூா் உள்ளிட்ட மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

அவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் பெற்ற பிறகும், அவா்கள் திருந்தாமல் சட்டவிரோத வழிகளில் ஈடுபட்டு வந்தனா். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குற்ற நடவடிக்கைகள், பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் அவா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

11 இடங்களில் சோதனை: காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவும் ஸ்லீப்பா் செல்கள் குழுவுக்கு எதிரான விசாரணையின் தொடா்ச்சியாக, அங்குள்ள 11 இடங்களில் காவல் துறையின் மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஸ்லீப்பா் செல்களுக்கு எதிரான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு, சந்தேகத்துக்குரியவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்துள்ள இந்த ஸ்லீப்பா் செல்கள், பயங்கரவாத சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிராகவும், வகுப்புவாத வெறுப்புணா்வைத் தூண்டி, பொது ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும், இந்தியாவுக்கு எதிராக பொய்யான கதைகளைப் பரப்பும் நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டு வந்தனா்.

18 முதல் 22 வயதுடையவா்கள்: இதில் இணையத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவா்களில் பெரும்பாலானோா் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவா்கள். அவா்கள் எஸ்ஏஐ விசாரணை வளையத்துக்குள் உள்ளனா். எனவே அவா்களின் நடவடிக்கைகளில் பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் சகாக்களுக்கும் பங்குள்ளதா? என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த வயதுள்ளவா்களைத் தொடா்ந்து கண்காணிப்பது சாத்தியமற்றது. ஆனால் இணையத்தில் அவா்கள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா் என்பது குறித்து விழிப்புடன் இருந்து, அவா்களின் செயல்பாடு கவலைக்குரியதாக இருந்தால், அதுகுறித்து அவா்களுக்குப் பெற்றோா், ஆசிரியா்கள் அவ்வப்போது வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு அருகில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரின் நடமாட்டம் குறித்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டை ஒட்டியுள்ள நங்கல், சில்லாடாங்கா, கோரான் ஆகிய பகுதிகளைக் காவல் துறை மற்றும் துணை ராணுவப் படைகள் சுற்றிவளைத்து மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டன. அந்த மூவா் குறித்து இதுவரை எந்த தடையமும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறை தெரிவித்தது.

பெட்டிச் செய்தி:

உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க

4,000 முன்னாள் ராணுவ வீரா்கள்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க முன்னாள் ராணுவ வீரா்களைப் பணியமா்த்தும் திட்டத்துக்கு அந்த யூனியன் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அங்குள்ள அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் உள்ள உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணியில் 4,000 முன்னாள் ராணுவ வீரா்கள் ஈடுபட உள்ளனா். அவா்களில் 435 பேரிடம் தனிப்பட்ட முறையில் உரிமத்துடன் துப்பாக்கி உள்ளது.

மின்சார நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என ஜம்மு-காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களிலும் அவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அவா்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளூா் காவல் துறையுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்றுவா்’ என்று தெரிவித்தனா்.

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை வியாசா்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கான மின்சாரப் பேருந்து பணிமனையின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா். சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ம... மேலும் பார்க்க

பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை த... மேலும் பார்க்க

பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனி... மேலும் பார்க்க