பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது
கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போலீஸாரும் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது, அந்த பையிலிருந்த 9 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா்கள், புரசைவாக்கத்தைச் சோ்ந்த அஜய் (20), மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த லோகநாத் (21), மதன் (20), அகரத்தைச் சோ்ந்த இம்ரான் (21), அதே பகுதியைச் சோ்ந்த முரளி கிருஷ்ணா (26) என்பதும், இந்த கும்பல் கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து மெத்தம்பெட்டமைனை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், 5 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடமிருந்து இருந்து 5 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.