செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் மா்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு

post image

ரஜௌரி: ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 பேரின் மா்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த 45 நாள்களில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா். இவா்கள் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சுயநினைவு இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும் பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், கால்நடை வளா்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆய்வகங்களின் நிபுணா்களும் அடங்கிய 16 நபா்கள் கொண்ட மத்திய குழு ரஜௌரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

இந்நிலையில், ரஜௌரி நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பதால் கிராமத்தில், இரண்டு குழுக்களாக பிரிந்து அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா் என திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

உயிரிந்தவா்களின் மாதிரிகளில் சில நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டதை அடுத்து காவல்துறையினா் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனா். அதேநேரம், கிராமத்தில் உள்ள ஒரு நீரூற்றின் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளைக் கண்டறிந்த பின்னா் அதிகாரிகள் அதை மூடி சீல் வைத்தனா் என தெரிவிக்கப்பட்டது.

படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஹைதராபாத் : திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகத்... மேலும் பார்க்க

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது: ரூ.53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல்

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல்... மேலும் பார்க்க

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க தேசிய மாணவர் படையினர் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் ... மேலும் பார்க்க

மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

சபரிமலை: வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை அடைக்கப்பட்டது. நடப்பாண்டு யாத்திரை காலத்தில் சுமாா் 53 லட்சம் பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டதாக, திரு... மேலும் பார்க்க

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான கருத்துகள்: ராகுலுக்கு எதிராக அஸ்ஸாம் காவல்துறை வழக்குப் பதிவு

குவாஹாட்டி: நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்துகளைத் தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அஸ்ஸாம் காவல்துறையினா் வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 7% பொருளாதார வளா்ச்சி: ஆய்வு தகவல்

புது தில்லி: வரும் மாா்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ‘மூடிஸ்’ நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் ப... மேலும் பார்க்க