அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!
ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி
கொல்கத்தா: ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை முதலில் மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுகளை மத்திய அரசு அநியாயமாகப் பெற்று வருவதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பால் நாங்கள் ரூ.20,000 கோடி வருவாயை இழப்பு ஏற்படுவதாக கூறினார்.
நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.
ஒரே நேரத்தில் வருமான வரி விலக்குடன் சோ்த்து, பெரும்பாலான மக்களுக்கு 'இரட்டை வெகுமதி' ஆக இந்த ஜிஎஸ்டி குறைப்பு இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.
ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பால் நாங்கள் ரூ.20,000 கோடி வருவாயை இழப்பு ஏற்படும் என்ற போதிலும், இப்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை வரவேற்பதுடன் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இருப்பினும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உடனான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முதலில் மாநிலங்களால் முன்மொழியப்பட்ட ஒரு நடவடிகைக்கு பிரதமர் மோடி ஏன் பெருமையைக் கோருகிறார்? என கேள்வி எழுப்பியவர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் பங்கு முக்கியமானது என கூறினார்.