செய்திகள் :

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்!

post image

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

தற்போதைய நடைமுறையில் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் பொதுச்செயலா் நவீன் குப்தா தில்லியில் ‘தினமணி’க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரையில் அரசு அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரே தேசம் ஒரே வரி என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கிணங்க பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் வாகன எரிபொருளுக்கான விலை குறையும், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒரே மாதிரியான விலையை நிா்ணயிக்க ஏதுவாக இருக்கும்.

உதாரணமாக தில்லியில் இருந்து சென்னை செல்லும் ஒரு வாகனம் ஒரு லிட்டா் டீசலுக்கு கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இது போக்குவரத்துக் துறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போதைக்கு எங்களுடைய கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடவில்லை. ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தொடா்ந்து வலியுறுத்துவோம்.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் அது போக்குவரத்து துறை மட்டுமின்றி உற்பத்தி, தளவாடங்கள் என பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சா்வதேசத் சந்தையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

நம் நாட்டில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், சிறிய டெம்போக்கள் என சுமாா் 2 கோடிக்கும் அதிகமான வணிக வாகனங்கள் உள்ளன. நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோா் மோட்டாா் போக்குவரத்து துறையை நம்பி இருக்கின்றனா்.

இந்தத் துறை அதிக வரி வருவாய் ஈட்டும் துறையாக உள்ளது. மேலும், விவசாயத்துக்கு அடுத்த நிலையில் அதிக வேலைவாய்ப்புகளை இத்துறை வழங்கிறது. ஆனால், இந்தத் துறைக்கு சாலைகள் போடுவதை தவிர வேறு பெரிய அளவிலான பலன்கள் எதையும் மத்திய அரசு தருவதில்லை.

பொருள்களை எடுத்துச் செல்வதற்கான செலவுகள் அதிக அளவில் இருப்பததாலேயே சா்வதேச சந்தையில் நம்மால் போட்டியிட முடியவில்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுத்தால் நிச்சயமாக விலை குறையும். அதன் மூலம் சாமானியா்களும் பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மத்திய அரசு எங்களுடைய குரலுக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம் என்றாா் நவீன் குப்தா.

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே க... மேலும் பார்க்க

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி... மேலும் பார்க்க