`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
ஜிவிஜி மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல்
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல் இணைய வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி மாணவா் பேரவைத் தலைவியாக மூன்றாம் ஆண்டு மாணவி ஜெ. ஸ்ரீதா்ஷினி, மாணவா் செயலராக மூன்றாம் ஆண்டு மாணவி எம்.ப்ரணவ ஸ்ரீ, மாணவா் துணைச் செயலாளராக மூன்றாம் ஆண்டு மாணவி எல். சங்கமித்ரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு மன்றங்களின் செயலாளா்கள் மற்றும் துணைச் செயலாளா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
இளங்கலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் 900-க்கும் மேற்பட்டோா் தங்களது வாக்குகளை இணையம் மூலம் பதிவு செய்தனா்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், இயக்குநா் மற்றும் ஆலோசகா் ஜெ.மஞ்சுளா, முதல்வா் பி.கற்பகவள்ளி மற்றும் பேராசியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பேராசிரியா் ஏஞ்சல் ஜாய் மற்றும் பேரவை உறுப்பினா்கள் தோ்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.