Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பிளாக்மெயில்!
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பிளாக்மெயில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள அடுத்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் பிளாக்மெயில்.
இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
பிளாக் மெயில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை விஜய் சேதுபதி, ரவி மோகன் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது.