"வள்ளுவரையும், வள்ளலாரையும் கபளிகரம் செய்ய ஒரு கூட்டம் திட்டம் தீட்டி வருகிறது" ...
ஜீத்து ஜோசப் - ஆசிப் அலி கூட்டணியில் புதிய படம்!
பிரபல மலையாள் இயக்குநர் ஜீத்து ஜோசப் படத்தில் ஆசிப் அலி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்தப் படத்துக்கு மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை கோழிக்கூடில் நடைபெற்றது. இந்தப் படத்தின் தலைப்புக்கு கீழே ‘அருகில் வரும்போது மறைந்துவிடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
த்ரிஷ்யம் படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
சமீபகாலமாக மிகவும் அதிகமான வெற்றிப் படங்களைத் தருபவராக இருக்கிறார் நடிகர் ஆசிப் அலி.
திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ரேகாசித்திரம் என்ற திரைப்படம்.
மிராஜ் படத்தின் திரைக்கதையை ஜீத்து ஜோசப் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் உடன் இணைந்து எழுதியுள்ளார்.
ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது 6ஆவது படமாகும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான கிஷ்கிந்த காண்டம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஈ4 எண்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
விஷ்ணு ஷ்யாம் இசை, ஒளிப்பதிவு சதீஷ் குரூப் செய்யவிருக்கிறார்கள்.