ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
ஜீவசமாதி அடைந்தவரின் உடலை தோண்டியெடுக்கும் காவல் துறை!
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவர் கட்டியிருந்த கோயிலில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.10) அன்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், அவரது மகன் ராஜநேசன் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்தப் பேட்டியில் கடந்த ஜன. 10 அன்று கோபன்சுவாமி அவராகவே அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தினுள் நடந்து சென்று அமர்ந்துக்கொண்டதாகவும்.
பின்னர், அங்கேயே கோபன் சுவாமி ஜீவ சமாதி அடைந்துவிட்டதாகவும், தனது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்காமல் அடக்கம் செய்யவேண்டும் என குடும்பத்தினரிடம் கோபன் சுவாமி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து
ஆனால், அவர்களது அக்கம்பக்கத்தினர் கோபன் சுவாமி பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்ததாகவும், இந்த மரணத்தில் அவரது குடும்பத்தினர் நடந்துக்கொண்டது மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், கோபன் சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காவல் துறையினர் அவரை காணவில்லை என வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியின் வருவாய் கோட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது தலைமையில் காவல் துறையினர் கோபன் சுவாமியின் உடலை இன்று (ஜன.13) தோண்டி எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகு மருத்துவர்கள் அந்த உடலை உடற்கூராய்வு சோதனை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.