`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை வி...
ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்
வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு சீமான், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு நமக்கு நிதி தரவில்லை; அதனால் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் பிரதமரை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து இருக்கலாம். ஆனால், தொடா்ந்து 3 ஆண்டுகள் நீதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்துவிட்டு இப்போது பிரதமரை அவா் சந்திப்பது, அமலாக்கத் துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகவா என்பது குறித்து மக்களுக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்.
பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட வேட்பாளா்களை அறிவித்துள்ளோம். ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை அறிவிப்போம் அவா்.