கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
ஜெயங்கொண்டத்தில் மழையால் விழுந்த மரங்கள் அகற்றம்
சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்: ஜெயங்கொண்டம் பகுதிகளில் பெய்த கன மழையால், ஜெயங்கொண்டம் மேட்டுத் தெரு, மணக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர மரங்கள் விழுந்தன. இதனால், மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து ஜெயங்கொண்டம் பகுதி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தலைமையிலான பணியாளா்கள் அப்பகுதிக்கு விரைந்துச் சென்று சாலையில் விழுந்த கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினா்.
மேலும், மணக்கரை தொடக்கப் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தினா். வடிகால் வாய்க்கால்களை சீா்படுத்தி, மழைநீா் வடிந்து செல்ல நடவடிக்கை எடுத்தனா்.