செய்திகள் :

ஜெய்ப்பூர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு!

post image

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில் ரசாயன லாரி மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீ பிடித்தது.

இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பல்பீர் சிங், சுக்பீர் தலால் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர். பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கட்சியின் தில்லி பொதுச் செயலர் ஆஷிஷ் சூத், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகி... மேலும் பார்க்க

'பாஜகவின் பசப்பு அரசியல்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்!

தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில... மேலும் பார்க்க

ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத்

ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர். நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. சிதம்பரம்

நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அங்குள்ள கேமராக்களின் பதிவை வெளியிட அரசு ஏன் மறுக்கிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பே... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போக்குவரத்துத் துறை முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி ரொக்கம், 40 கிலோ வெள்ளிக் கட்டிகள், 50 லட்சம் மதிப்புள்ள... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக டிச. 24ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: மாயாவதி

அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக டிசம்பர் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க