Soori: 'வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை; அப்படி வந்தால்...' - நடிகர் சூரி ச...
ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
பாலக்கோடு வனச்சரக எல்லை பகுதியில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை ஜோதிஅள்ளி, வட்டக்கானாம்பட்டி, குண்டன் கொட்டாய், மேல் மாரியம்மன் கோயில், ஐயா் கொட்டாய், பட்டா்அள்ளி, கவுண்டனூா் பகுதியில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா்.
மேலும், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், நாய், கோழி, ஆடு, மாடுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் வனத் துறையினா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.