செய்திகள் :

டங்ஸ்டன் விவகாரம்: `எல்லோரும் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்' - அன்புமணி ராமதாஸ்

post image

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரிட்டாபட்டியில் அன்புமணி

டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு எதிராக சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசும் தற்போது சுரங்க ஏலம் குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளதாக சொல்லப்படும் நிலையில், போராட்டம் நடத்தி வரும் மக்களைக் காண அரிட்டாபட்டிக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தையும் எந்த அரசும் எடுக்க விடக் கூடாது. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடும்போது தமிழக அரசு எதிர்க்கவில்லை. மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி உள்ளார்கள். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நாங்கள் விட மாட்டோம்.

ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதாக கூறும் திமுக, மறுபுறம் இங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறது. டங்ஸ்டன் விவகாரத்தில் சூழ்ச்சி உள்ளது. எல்லோரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்கள். விவசாயிகள் என் கடவுள், அவர்கள் மண்ணை காக்க வேண்டியது என் கடமை. அரசியலுக்காகவோ, ஓட்டுக்காகவோ இங்கு வரவில்லை. உணர்வுபூர்வமாக வந்துள்ளேன். பாரம்பரிய பல்லுயிர் தலமாக உள்ள இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரசு அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். எங்களிடம் ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டில் எந்த சுரங்கமும் அமைக்க முடியாது என சட்டம் கொண்டு வருவோம். டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்திவிட்டதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள். திட்டத்தை நிறுத்தவில்லை, மறு ஆய்வுதான் செய்ய உள்ளனர்" என்றார்.

அன்புமணி

பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "இங்கு ட்ங்ஸ்டன் இருப்பது குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு கொடுத்ததே தமிழக அரசுதான். இங்கு தனியார் கிரானைட் குவாரிக்கு கொடுக்கப்பட்ட நிலம் மீண்டும் தமிழக அரசுக்கு கொடுக்கபட்டதற்கு காரணமே இங்கு டங்ஸ்டன் திட்டத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால்தான். டங்ஸ்டன் திட்டம் குறித்து மத்திய அரசு நடத்திய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் கலந்துகொண்டனர். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக இப்போது தீர்மானம் போடுகிறார்கள். இதையேதான் கச்சத்தீவு பிரச்னையிலும் போட்டார்கள். அதனால் பலன் இல்லை. டெல்டாவை அறிவித்தது போல இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். மண்ணை அழித்துவிட்டு பின்பு சாப்பாட்டுக்கு யாரிடம் பிச்சை எடுக்க போகிறோம்? ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. இதில் கட்சி கூட்டணி பற்றி நான் பேசவில்லை. மத்திய அரசு செய்ததும் தவறு என்று கண்டிக்கிறேன். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா?" என்றார்.

பாமக: `நான் சொல்வதுதான் முடிவு’ சீறிய ராமதாஸ் ; மைக்கை வீசிய அன்புமணி - கருத்து மோதலின் பின்னணி?

அப்செட் அன்புமணி!ராமதாஸ் அறிவிப்பு...புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.க-வின் சிறப்பு மாநில பொ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஜனவரி 12-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் ஏன்?’ – அமைச்சர் சொல்வதென்ன ?

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

'புதிய சர்கஸ் கம்பெனியால், பழைய சர்கஸ் கோமாளிகள் வேடம் அணிகிறார்கள்' - டி.ஆர்.பி ராஜா

திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி... மேலும் பார்க்க

Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசிய பிரதமர் இப்ராஹிம்

இந்திய வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இவரின் மறைவுக்கு உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன் சிங்கின் தன்மையான ஆளுமையும் அ... மேலும் பார்க்க

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?""நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ... மேலும் பார்க்க