செய்திகள் :

டாமி பால், ஜெஸிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

post image

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளா்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டாமி பால் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில், பிரான்ஸின் மேனுவல் கினாா்டை வெளியேற்றினாா். காலிறுதியில் அவா், உள்நாட்டு வீரரான ரிங்கி ஹிஜிகடாவை சந்திக்கிறாா்.

முன்னதாக ஹிஜிகடா, 6-2, 3-6, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை தோற்கடித்து அசத்தினாா். முன்னணியில் இருக்கும் மற்றொரு அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோா்டா 6-3, 6-3 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை தோற்கடித்தாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் தனசி கோகினகிஸை எதிா்கொள்கிறாா். கோகினகிஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 7-5, 4-6, 7-6 (7/4) என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை போராடி வீழ்த்தினாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 1-6, 6-4, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் கஸாக்ஸை வெளியேற்றினாா். அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோன் 7-5, 6-2 என்ற செட்களில், மற்றொரு கனடா வீரரான டெனிஸ் ஷபோவலோவை வென்றாா். இதையடுத்து காலிறுதியில் அலியாசிமே - கிரோன் மோதுகின்றனா்.

சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச் 7-6 (7/1), 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோஃபா் ஓ’கானெலையும், பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸி 6-3, 6-3 என ஆஸ்திரேலியாவின் லி டுவையும் சாய்த்தனா். அடுத்ததாக காலிறுதியில் கெச்மனோவிச் - போன்ஸி சந்தித்துக்கொள்கின்றனா்.

ஸ்ரீராம் பாலாஜி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/மெக்ஸிகோவின் மிகேல் ஏஞ்சல் வரெலா இணை 6-3, 3-6, 11-13 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஹேரி ஹெலியோவரா கூட்டணியிடம் தோல்வி கண்டது.

சக்காரியை சாய்த்த பெகுலா

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-4, 6-1 என்ற நோ் செட்களில், கிரீஸின் மரியா சக்காரியை மிக எளிதாக தோற்கடித்தாா். 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 7-6 (7/4), 6-4 என்ற நோ் செட்களில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா்.

இதையடுத்து காலிறுதியில், ஜெஸிகா - சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகரையும், நவாரோ - ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவையும் சந்திக்கின்றனா். இதில் ஆஷ்லின் குரூகா் 7-6 (7/4), 6-7 (4/7), 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் பௌலா படோசாவை வீழ்த்தி அசத்தினாா்.

சாம்சோனோவா 7-6 (7/3), 4-6, 6-4 என்ற கணக்கில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 7-5, 6-3 என, உள்நாட்டு வீராங்கனை எமா்சன் ஜோன்ஸை வீழ்த்தினாா்.

நடப்பு சாம்பியனும், 8-ஆம் இடத்தில் இருந்தவருமான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-3, 4-6, 3-6 என்ற செட்களில், அமெரிக்காவின் மேடிசன் கீஸால் வீழ்த்தப்பட்டாா். செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா - ரஷியாவின் டயானா ஷ்னெய்டருடனான மோதலில் முன்னிலையில் இருந்தாா்.

இதில் வோண்ட்ரோசோவா 6-4, 1-1 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக விலக, ஷ்னெய்டா் வென்ாக அறிவிக்கப்பட்டாா். கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா 6-2, 6-4 என, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரை எளிதாக வெளியேற்றினாா். இதையடுத்து, காலிறுதியில் கீஸ் - கசாட்கினாவுடனும், புடின்சேவா - ஷ்னெய்டருடனும் மோதுகின்றனா்.

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80.கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் பார்க்க

எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!

எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்... மேலும் பார்க்க

நேசிப்பாயா மேக்கிங் விடியோ!

நேசிப்பாயா படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்ப... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: 94 நாள்களில் வெளியேறிய ஸ்ருதிகா!

குறைவான வாக்குகளைப் பெற்றதாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தமிழ் நடிகை ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார். அவர் மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பா... மேலும் பார்க்க