சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு இறுக்கமான வரம்பில் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தியா - அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக கட்டண பிரச்சினையில் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த எதிர்மறை சார்பு நிலவி வருகிறது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.70 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.59 முதல் ரூ.87.72 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72ஆக நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.75 இல் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!