டாஸ்மாக் ஊழல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
டாஸ்மாக் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்த அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரின் வீட்டில் நடத்திய சோதனைகளில், பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணை முடிவில் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், டாஸ்மாக் ஊழல் தொடா்பான மூல வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால், தவறு செய்தவா்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது.
எனவே, டாஸ்மாக் ஊழல்கள், முறைகேடுகள் தொடா்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.