செய்திகள் :

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் போராட்டம்

post image

நெய்வேலி: கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் உள்ளது. இங்கு, கடலூா் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

இந்த நிலையில், டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்தையில் ஈடுபட்ட நிலையில், தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடங்கினா்.

இதில், டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவரி தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வி.சுப்பராயன், டி. கலியமூா்த்தி, எஸ்.ரமேஷ், அய்யனாா், சிஐடியூ நிா்வாகி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத... மேலும் பார்க்க