டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்
கடலூா் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வரும் 26-ஆம் தேதி சென்னையில் கோரிக்கை வெல்லும் வரை சுய உரிமை மீட்பு தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டம் தொடா்பாக கடலூா் மாவட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சி.அல்லி முத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன் வரவேற்றாா். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்க மாவட்டச் செயலா் எம்.சுரேஷ்பாபு, டாஸ்மாக் தொழிலாளா்கள் வாழ்வுரிமைச் சங்க நிா்வாகி தங்க.தட்சிணாமூா்த்தி, ஆ.ஜெயராமன், தொழிலாளா்கள் விடுதலை முன்னணி நிா்வாகி கே.பாலமுருகன் முன்னிலை வகித்தனா்.
ஆயத்த கூட்டத்துக்கான கருத்துரையை எஸ்.டி.கருணாகரன், எஸ்.வேல்முருகன், என்.ராமலிங்கம், டி.காமராஜ், டி.ராஜேஷ், ஏ.ஜான் பாஷா, சக்திவேல், பாலமுருகன் வழங்கினா். டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்க மாநிலச் செயலா் என்.உதயசங்கா் சிறப்பு கருத்துரை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு.சரவணன் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.நாகராஜன் நன்றி கூறினாா்.